/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தோணுகால் குண்டாறு பாலத்தில் தடுப்புச்சுவரை சீரமைப்பது அவசியம்
/
தோணுகால் குண்டாறு பாலத்தில் தடுப்புச்சுவரை சீரமைப்பது அவசியம்
தோணுகால் குண்டாறு பாலத்தில் தடுப்புச்சுவரை சீரமைப்பது அவசியம்
தோணுகால் குண்டாறு பாலத்தில் தடுப்புச்சுவரை சீரமைப்பது அவசியம்
ADDED : மே 09, 2025 01:13 AM
காரியாபட்டி: மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் தோணுகால் குண்டாற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் விபத்து ஏற்படுவதற்கு முன் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில் காரியாபட்டி தோணுகால் குண்டாறு குறுக்கே கட்டப்பட்ட பழைய பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ரோடு சற்று வளைவாக உள்ளதால் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகின்றன. கடந்த சில மாதங்களில் நடந்த விபத்தால் இரு புறங்களிலும் உள்ள பக்கவாட்டுச் சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள், டூவீலரில் செல்பவர்கள் தட்டு தடுமாறி விழ நேர்ந்தால் ஆற்றுக்குள் விழுந்து உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து விபத்து நடந்தும், சீரமைப்பு பணிகள் எதுவும் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருவதால் பக்கவாட்டு சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.