/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'போதைப்பொருள் கடத்தல் பழி போடுவது சரியல்ல' எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி

ADDED : மார் 06, 2024 05:34 AM
விருதுநகர் : தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை வைத்து தி.மு.க., மீது பழிப் போடுவது சரியானது அல்ல, என விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் பணிகள் 5 ஆண்டுகளாக நடக்காமல் தற்போது தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. போதைப் பொருள் கடத்தல் குறித்து பேசுவதற்கு இண்டியா கூட்டணி கட்சிகள் தயாராக உள்ளது.
இதற்கு முன் தமிழகம் வந்த அனைத்து பிரதமர்களும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினர். ஆனால் பிரதமர் மோடி ஹிந்தியில் பேசுவதால் தமிழர்கள் ஹிந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் செயலாக இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் காங். முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7, 8 தேதிகளில் நடக்கும் மைய தேர்தல் குழு கூட்டத்தில் வெளியிடப்படும், என்றார்.