ADDED : நவ 19, 2025 07:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்துவது, 30 சதவீத காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் ஜாக்டோ ஜியோ சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை வகித்தார். அரசு ஊழிய சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, முதுநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் முத்தையா, நிர்வாகிகள் செல்வ கணேசன் உடற்கல்வி, இயக்குனர்கள் சங்க மாவட்ட செயலாளர் பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

