/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி மாவட்டங்கள் தோறும் விரிவாக்கம்
/
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி மாவட்டங்கள் தோறும் விரிவாக்கம்
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி மாவட்டங்கள் தோறும் விரிவாக்கம்
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி மாவட்டங்கள் தோறும் விரிவாக்கம்
ADDED : ஆக 29, 2025 05:37 AM
விருதுநகர்: ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணிகளை 15 வயதுள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்காக தமிழக அரசு மாவட்டங்கள் தோறும் விரிவுப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி திட்டம் 2007ல் மதுரை, விருதுநகர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவாரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், சென்னையில் இரு மண்டலங்களில் துவங்கப்பட்டது.
பொதுவாக ஜப்பானிய மூளைக்காய்ச்சல் கியூலெக்ஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் நோய். மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கி பாதிப்பு, வலியை உண்டாக்கும். சிகிச்சை பெறாமல் இருந்தால் உயிரிழப்பும் ஏற்படலாம்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். சென்னையில் 13 மண்டலங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசியில் ஆக., 14ல் அமைச்சர் சுப்பிரமணியன் விரிவாக்கம் செய்தார்.
அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் 15 வயதுள்ள குழந்தைகள், வளிரளம் பருவத்தினருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி திட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு விரிவுப்படுத்தவுள்ளது.