/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரம்: வாங்க தயங்கும் மக்கள்
/
மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரம்: வாங்க தயங்கும் மக்கள்
மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரம்: வாங்க தயங்கும் மக்கள்
மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரம்: வாங்க தயங்கும் மக்கள்
ADDED : ஜன 13, 2024 05:03 AM
அருப்புக்கோட்டை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ ரூ. 3 ஆயிரம் விற்பதால் மக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
அருப்புக்கோட்டை மல்லிகை பூவிற்கு புகழ் பெற்றது. இந்தப் பகுதியில் விளையும் மல்லிகை பூக்கள் நல்ல மனத்துடன் வெள்ளையாக இருப்பதால் இதற்கு 'கிராக்கி' உண்டு. சில நாட்களுக்கு முன் பெய்த கன மழையால் பூக்கள் வரத்து குறைந்து போனது.
20 நாட்களாக மல்லிகை பூவின் விலை ஏறிக்கொண்டே தான் செல்கிறது. தற்போது பொங்கல் பண்டிகை வருவதாலும், பூக்களின் வரத்து குறைந்து போனதாலும் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ 3 ஆயிரத்தை தொட்டது.
கனகாம்பரம் ஒரு கிலோ 2 ஆயிரமும், முல்லை ஆயிரத்து 500, பிச்சி ஆயிரத்து 300, செவ்வந்தி 300 என பூக்கள் விலை உச்சத்தில் உள்ளது. இதனால், பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்கள் உள்ள நிலையில் மக்கள் பூக்கள் வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து மல்லிகைப்பூ வியாபாரிகள்: மல்லிகைப்பூ வரத்து குறைந்து போனதால் விலை கூடிக்கொண்டே செல்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஒரு கிலோ 4 ஆயிரத்திற்கு வந்து விடும் என்றனர்.