/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் ஜெட் ராடர் வாகனங்கள் பழுது பாதாள சாக்கடை அடைப்பு நீக்க வழியில்லை
/
விருதுநகரில் ஜெட் ராடர் வாகனங்கள் பழுது பாதாள சாக்கடை அடைப்பு நீக்க வழியில்லை
விருதுநகரில் ஜெட் ராடர் வாகனங்கள் பழுது பாதாள சாக்கடை அடைப்பு நீக்க வழியில்லை
விருதுநகரில் ஜெட் ராடர் வாகனங்கள் பழுது பாதாள சாக்கடை அடைப்பு நீக்க வழியில்லை
ADDED : ஆக 18, 2025 03:30 AM
விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் பாதாளசாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்காக வாங்கப்பட்ட இரு வாகனங்களும் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டுகழிவுநீர் வெளியேறுகிறது.
விருதுநகர் நகராட்சி பகுதியில் 2007ல் ரூ.23.25 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. நகரில் உள்ள 25 ஆயிரம் குடியிருப்புகளில் சுமார் 12 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், தெருக்களில் உள்ள மேன்ஹோல்களில் விழுகிறது. பின் லிப்டிங், பம்பிங் ஸ்டேஷன்களில்மின் மோட்டார்கள் மூலம் மாத்தநாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும்.
பின் அங்கிருந்து சுத்திகரிப்புக்கு பின் கவுசிகா நதி குல்லுார் சந்தை அணையில் கலக்குமிடத்தில் விழும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில்ஒரு மேன்ஹோலில் அடைப்பு ஏற்பட்டால்அதன் முன்பு உள்ள அனைத்து மேன்ஹோல்களும் நிரம்பி தாழ்வான பகுதியில் உள்ள ரோடுவழியாக கழிவுநீர் வெளியேறும். தாழ்வான வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடும். திடீரென ஏற்படும் அடைப்புகளை அகற்ற விருதுநகர் நகராட்சியில் 2 ஜெட் ராடர் வாகனங்கள் உள்ளன. அவற்றின் மூலம் உடனுக்குடன் அடைப்புகளை நீக்கும் பணி நடந்தது.
இந்நிலையில்பெரிய ஜெட் ராடர் வாகனம் பழுதாகி பலமாதங்கள் ஆகிய நிலையில், இப்போது மற்றொரு வாகனமும் பழுதாகி விட்டது.இதனால் பாத்திமாநகர், எல்.பி.எஸ். நகர்,காமராஜர் பைபாஸ் சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலை,கட்டையாபுரம், மல்லாங்கிணறு சாலை, படேல் சாலை, பர்மா காலனி, பரங்கிநாதபுரம்ஆகிய பகுதிகளில் மேன்ஹோல்களில் அடைப்புகள் ஏற்பட்டு,ரோடுகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்அவ்வழியாக செல்லும் குழந்தைகள்,பெரியோர் தொற்று நோயால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், விருதுநகர் உள்ள 2 ஜெட் ராடர் வாகனங்களும் பழுதாகி விட்டன.எனவே ராஜபாளையம் நகராட்சியில் இருந்து ஜெட் ராடர் வாகனத்தை அடைப்பு நீக்க கேட்டுள்ளோம் என்றனர்.எனவே நகராட்சி நிர்வாகம்ஜெட்-ராடர் வாகனத்தை பழுது நீக்குவதோடு, புதிய அடைப்பு நீக்கும் வாகனங்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.