/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓரா ஜூவல்லரியின் நகை கண்காட்சி, விற்பனை
/
ஓரா ஜூவல்லரியின் நகை கண்காட்சி, விற்பனை
ADDED : நவ 10, 2024 06:59 AM

சிவகாசி : சிவகாசி பெல் ஓட்டலில் ஓரா ஜூவல்லரியின் நகை கண்காட்சி, விற்பனை நடந்தது. இதில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ஆபரணங்களை தேர்ந்தெடுத்தனர்.
சிவகாசி பெல் ஓட்டலில் ஓரா ஜூவல்லரியின் நகை கண்காட்சி ,விற்பனை நேற்று துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.
தினமும் காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும். சிறப்பு சலுகையாக குறிப்பிட்ட சில வைர நகைகளுக்கு ரூ.13,999 முதல் தவணையாக செலுத்திவிட்டு மீதித்தொகையை மாதத் தவணையாக செலுத்தும் திட்டம் உள்ளது. கண்காட்சி விற்பனை நாளை முடிவடைகிறது.
ஓரா மேலாளர் ஷாஜி கூறியதாவது, வைரங்களை செதுக்குவது மற்றும் தயாரிப்பது முதல் சிறந்த வைரம், தங்க நகைகளை வடிவமைத்தல், சில்லறை விற்பனை செய்வது வரை ஓரா அதன் துவக்கத்திலிருந்தே நீண்ட துாரம் பயணித்துள்ளது.
இன்று ஓரா இந்தியாவின் மிகச்சிறந்த மணப்பெண் நகை சில்லறை விற்பனை நிலையங்களில் ஒன்றாக உள்ளது.
30 நகரங்களில் 88 கடைகளுடன் அதன் பிரகாசத்தை பரப்பி வருகிறது. ஆண்ட்வெர்ப் , ஹாங்காங், டோக்கியோ, மும்பை நியூயார்க்கில் உள்ள ஐந்து உலகளாவிய வடிவமைப்பு மையங்களுடன் தொடர்ந்து வடிவமைப்பு, தலைமை, தயாரிப்பு கண்டுபிடிப்புகளில் முன்னணியில் ஓரா உள்ளது.
பல நுாற்றாண்டுகளாக மரபு வழியில் வந்த மாஸ்டர் கைவினைஞர்கள், நகை தயாரிப்பின் பழைய பாரம்பரியம், வெட்டப்பட்ட பெல்ஜிய வைரங்கள், வைர நகைகள் நுட்பமான வடிவமைப்புகள், வண்ணக் கற்களில் விரிவான மணப்பெண் செட், 73 முக காப்புரிமை பெற்ற ஓரா கிரவுன் ஸ்டார் போன்றவை எங்களது நிறுவனத்தில் சிறப்பு அம்சங்கள். இவ்வாறு அவர் கூறினார்.