ADDED : ஏப் 30, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்; தமிழகத்தில் 117 சீனியர் சிவில் நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் பணியிட மாற்றம் செய்துள்ளது.
இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் அருப்புக்கோட்டை சப் கோர்ட் நீதிபதி செல்வன் சேசு ராஜா தூத்துக்குடிக்கும், ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி கவிதா, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராகவும், விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனம், ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராகவும், பரமக்குடி சார்பு நீதிபதி சதீஷ், அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

