/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உலகத்தர வரிசையில் கலசலிங்கம் பல்கலை
/
உலகத்தர வரிசையில் கலசலிங்கம் பல்கலை
ADDED : நவ 23, 2025 04:36 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக துணை தலைவர் சசி ஆனந்த் அறிக்கை;
க்யூ.எஸ். உலக பல்கலை பல்வேறு பிரிவுகளில் மதிப்பிட்டு 2026 தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் கலசலிங்கம் பல்கலை நிலைத்தன்மை பிரிவில் இந்திய அளவில் 44, ஆசியாவில் 351, உலக அளவில் 1001 முதல் 1010 க்குள் இடம் பெற்றுள்ளது.
மேலும் உலகளவில் நிர்வாக பிரிவில் 416, சுற்றுப்புற சூழல் தாக்கம் பிரிவில் 1127, சமுதாயத் தாக்கம் பிரிவில் 1243 இடத்தை பெற்றுள்ளது. இத்தரவரிசை அறிவு பரிமாற்றம், கல்வித் தாக்கம், ஆராய்ச்சி, வேலைவாய்ப்புகள் போன்ற பல அளவுகோல்களில் மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.
இந்த சாதனைக்கு பாடுபட்ட பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்கு வேந்தர் ஸ்ரீதரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

