/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தனிச்சின்னத்தில் கூடுதல் தொகுதியில் போட்டி
/
தனிச்சின்னத்தில் கூடுதல் தொகுதியில் போட்டி
ADDED : நவ 23, 2025 04:35 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: 2026 சட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, இழந்த அங்கீகாரத்தை மீட்க தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அதிக இடங்களை பெற்று போட்டியிட வேண்டுமென ம.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்தது. சாத்துார் எம்.எல்.ஏ. ரகுராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் பங்கேற்று தேர்தல் நிதி சீட்டினை வழங்கி பேசினர். மாநில, மாவட்ட,நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு இழந்த அங்கீகாரத்தை மீட்டெடுக்க திமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற்று போட்டியிட வேண்டும், வைகோவின் நடை பயணத்தில் அதிகளவில் பங்கேற்பது, தைப்பொங்கலை முன்னிட்டு கட்சியினரின் சொந்த இடங்களில் கொடியேற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

