/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வளர்ச்சி பணிகள் அமைச்சர் பங்கேற்பு
/
வளர்ச்சி பணிகள் அமைச்சர் பங்கேற்பு
ADDED : நவ 23, 2025 04:32 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 5 கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை, செட்டிகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 கூடுதல் வகுப்பறை கட்டுதல், அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு அரங்கம், கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜைகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
செட்டிகுறிச்சியில் புதிய மேல்நிலை தொட்டி, நமச்சிவாயம் கிராமத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகளையும் துவக்கி வைத்தார். ராம நாயக்கன்பட்டியில் ரேஷன் கடை, உடையநாதபுரத்தில் மேல் தொட்டி ஆகியவற்றை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், செட்டிகுறிச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் அரவிந்த், மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

