/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
/
மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 16, 2025 01:34 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் 123வது பிறந்த நாள் விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
விருதுநகரில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு கலெக்டர் சுகபுத்ரா மரியாதை செலுத்தினார். இவருடன் எஸ்.பி., கண்ணன் பங்கேற்றார். அதே போல எம்.பி., மாணிக்கம் தாகூர், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் மரியாதை செலுத்தினர்.
விருதுநகர் காமராஜர் நுற்றாண்டு நினைவு மணி மண்டபத்தில் உள்ள உருவச்சிலைக்கு அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எம்.எல்.ஏ., சீனிவாசன், விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன், நகரச்செயலாளர் தனபாலன், அருப்புக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பாராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர். மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மரியாதை செலுத்தினர்.
* நாடார் மஹாஜன சங்கம் சார்பில் தலைவர் குருசாமி வெள்ளையன் தலைமை வகித்தார். பொதுச்சயலாளர் கரிக்கோல்ராஜ் வரவேற்றார். காளீஸ்வரி குழுமம் செல்வராஜன் மரியாதை செலுத்தினார். நாடார் மகளிர் அமைப்புகள் திருவிளக்கு ஏற்றினர். அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
* நோபிள் மகளிர் கல்லுாரியில் காமரஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்விக் குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், கல்லுாரி செயலாளர் வெர்ஜின் இனிகோ தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கல்லுாரி முதல்வர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
*வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் நடந்த விழாவில் கல்லுாரி தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் மதன், முதல்வர் சிந்தனா, கூட்டுச்செயலாாளர் இனிமை முன்னிலை வகித்தனர்.
காமராஜர் ஒரு சகாப்தம் எனும் தலைப்பில் மாணவி கார்த்திகா, மதுரை இலக்கிய மன்ற நிறுவனர் அவனி மாடசாமி பேசினர்.
*காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சரளா தலைமையில் கொண்டாடப்பட்டது. மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியைகள் கலந்து கொண்டனர். கல்குறிச்சியில் நியூ லைப் பவுண்டேஷன், காரியாபட்டி சுரபி அறக்கட்டளை சார்பாக கல்வி உபகரணங்களை எஸ்.ஐ., சர்மிளா பேகம், அறக்கட்டளை நிறுவனர் விக்டர் வழங்கினர். பவுண்டேசன் நிறுவனர் முனீஸ்வரன், முதல்வர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* சாத்துாரில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் சுப்பிரமணியன் ராஜவர்மன் மற்றும் கட்சி நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* சாத்துார் முக்குராந்தலில் நகர வட்டார காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகரத் தலைவர் அய்யப்பன்,தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் வட்டார தலைவர்கள் சுப்பையா கார்த்திக் ஆகியோர் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
*தி.மு.க., சார்பில் சிவகாசி, திருத்தங்கலில் உள்ள காமராஜர் சிலைக்கு மேயர் சங்கீதா, மாநகரச் செயலாளர் உதயசூரியன், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
*காங்., சார்பில் அசோகன் எம்.எல்.ஏ., கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
*ம.தி.மு.க., சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநில அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் சிவசக்தி குமரேசன், கவுன்சிலர் ராஜேஷ், மாவட்ட துணைச் செயலாளர் கணேசன், கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
*மாநகர பா.ஜ. சார்பில் மாவட்டத் தலைவர் சரவண துரைராஜா, பாலசுப்பிரமணியன், கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜே.சி. சிவகாசி டச்சஸ், அருகாமை பள்ளி, கசடதபற, லவ்லி குழுமம் சார்பில் கே.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும், சிவகாசி மாநகராட்சி ஏவிடி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் நாள்காட்டி தண்ணீர் பாட்டில் பரீட்சை அட்டைகள் வழங்கப்பட்டன. ஜே.சி. சிவகாசி டச்சஸ் தலைவர் அஞ்சனா, அருகாமை பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெயமேரி, கசடதபற நிர்வாகி லவ்லி செந்தில்குமார் கலந்து கொண்டனர்.
*ஸ்ரீவில்லிபுத்துாரில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தையா, ஒன்றிய செயலாளர் முருகன், நகர் செயலாளர் காமராஜ், முன்னாள் கவுன்சிலர் அங்குராஜ் , கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜகோபால் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நாராயணன், சத்தியமூர்த்தி உட்பட பலர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.