ADDED : டிச 05, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பூக்கள் வரத்து குறைவாலும், முகூர்த்த நாட்கள்என்பதாலும் பூக்கள் விலை உச்சத்தில் உள்ளது.
சில நாட்களாக அருப்புக்கோட்டை சுற்றுப்பகுதியில் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. இன்று முகூர்த்த நாள் என்பதாலும், பூக்கள் சரிவர பூக்காததால் விலை உச்சத்தில் உள்ளது.
நேற்று 1 கிலோ கனகாம்பரம் ரூ.2500க்கும், மல்லிகை பூ ரூ.1800, முல்லை ரூ.1000, பிச்சி ரூ.700, ரோஜா ரூ.400, சம்பங்கி ரூ.350, கேந்தி பூ ரூ.200க்கும் விற்கப்பட்டது.