/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கஞ்சம்பட்டி கால்வாய் உடைப்பு ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதம்
/
கஞ்சம்பட்டி கால்வாய் உடைப்பு ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதம்
கஞ்சம்பட்டி கால்வாய் உடைப்பு ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதம்
கஞ்சம்பட்டி கால்வாய் உடைப்பு ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதம்
ADDED : டிச 16, 2024 05:11 AM

திருச்சுழி : திருச்சுழி கஞ்சம்பட்டி கால்வாய் கனமழையால் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.
திருச்சுழி ரெட்டியபட்டி அருகே கஞ்சம்பட்டி கண்மாய் உள்ளது. இதில் 20 கி.மீ., சுற்றளவில் பெய்யக்கூடிய மழை சேகரமாகும். கண்மாய் நீரின் ஒரு பகுதி வைப்பாற்றுக்கும், மற்றொரு பகுதி கண்மாய் ஷட்டர் மூலம் பரளச்சி, மேலையூர், பூலாங்கால், பம்மநேந்தல், அரியநாச்சிபுரம், புல்லாநாயக்கன்பட்டி, பெருநாழி உள்ளிட்ட 42 கண்மாய்களுக்கும் செல்லும்.
பொம்மநாயக்கன்பட்டி அருகே கால்வாயின் தென்பகுதி கரை சில ஆண்டுகளாக உடைந்து தண்ணீர் வெளியேறி விவசாய பயிர்களை அழித்து வருகிறது. கரையை பலமாக்க பலமுறை விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தும் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என இப்பகுதி விவசாயிகள் புலம்புகின்றனர்.
இது குறித்து காவிரி, குண்டாறு, வைகை பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் ராம் பாண்டியன்: தற்போது பெய்த கனமழையில் இந்த பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 2000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய பயிர்கள் மக்காச்சோளம், சிவப்பு சோளம், மிளகாய், உளுந்து, பருத்தி உட்பட பணப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. 5க்கும் மேற்பட்ட கிராமத்தினரின் விவசாய வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
வறட்சி, பயிர் காப்பீடு கிடைக்காத சூழலால் இப்பகுதியினர் கடும் சிரமத்தில் உள்ளனர். கால்வாயை நிரந்தரமாக சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்கள் அனைத்தும் அழுகிவிட்டன. உடனடியாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

