/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கஞ்சம்பட்டி கண்மாய், கால்வாய் ரூ.3.74 கோடியில் புனரமைப்பு
/
கஞ்சம்பட்டி கண்மாய், கால்வாய் ரூ.3.74 கோடியில் புனரமைப்பு
கஞ்சம்பட்டி கண்மாய், கால்வாய் ரூ.3.74 கோடியில் புனரமைப்பு
கஞ்சம்பட்டி கண்மாய், கால்வாய் ரூ.3.74 கோடியில் புனரமைப்பு
ADDED : ஆக 14, 2025 02:23 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே ராஜகோபாலபுரத்தில் உள்ள கண்மாய்கள், விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் கஞ்சம்பட்டி கண்மாய், கால்வாய் புனரமைப்பு பணி துவங்கப்பட்டது.
அருப்புக்கோட்டை அருகே கஞ்சம்பட்டி கண்மாய் மழைக் காலத்தில் நிறைந்து பரளச்சி, வடக்குநத்தம், தெற்குநத்தம், தொப்பு புலாக்கரை, ராஜகோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன.
மழை வெள்ளம் அதிகமாக வரும் நேரத்தில் கஞ்சம்பட்டி கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங் களுக்குள் தண்ணீர் புகுந்து விவசாய பயிர்கள் சேத மடைகின்றன.
தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பிரச்னை இருந்து வந்த நிலையில், முதல்வர் சட்ட சபையில் கஞ்சம்பட்டி கண்மாய் புனரமைப்பு பணி செய்யப்படும் என அறிவித்தார்.
இதன்படி, 21 கண்மாய்களின் கீழ் 3 ஆயிரத்து 249 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் கஞ்சம்பட்டி கண்மாய், பிரதான வாறுகால் புனரமைக்கும் பணி துவங்கியது. நீர்வளத்துறை வைப்பாறு வழிநில கண்காணிப்பு பொறியாளர் மதன சுதாகரன் துவக்கி வைத்தார்.
கஞ்சம்பட்டி கண்மாய் கரை 3 கி.மீ., தூரம் பலப்படுத்தப்படும். மழைநீர் வரத்து கால்வாய் மற்றும் உபரி நீர் கால்வாய் 6 கி.மீ., தூர்வாரி சீரமைக்கும் பணியும், கண்மாயின் கலுங்கு மற்றும் இடது புறம் உள்ள மதகு பராமரிப்பு பணியும், ராஜகோபாலபுரம் அருகே செல்லும் உபரி நீர் கால்வாயில் 4 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.