/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாயில் ஆகாயத் தாமரை-- நிரந்தர தீர்வு எப்போது
/
கண்மாயில் ஆகாயத் தாமரை-- நிரந்தர தீர்வு எப்போது
ADDED : டிச 01, 2025 06:33 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் கடம்பன்குளம் கண்மாய் நிறைந்து சில நாட்களுக்குள் ஆகாய தாமரை பசுமை போர்த்தி ஆக்கிரமித்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
ராஜபாளையம் - தென்காசி மெயின் ரோட்டில் கடம்பன் குளம் கண்மாய் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாய் ஒரு மாதத்திற்கு முன்புதான் குடிமராமத்து பணிகள் முடிந்து ஏற்கனவே இருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு சுத்தமாக்கும் பட்டது. இந்நிலையில் தொடர் மழையால் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து காட்சியளித்தது. தண்ணீர் ஓடிக் கொண்டே இருந்ததால் சிக்கல் இல்லை.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களில் லேசாக தொடங்கி ஆகாயத்தாமரை மீண்டும் பல்கி பெருகி வளர்ந்ததுள்ளதுடன் தண்ணீர் பரப்பி மூடத் தொடங்கியுள்ளது. இதனால் நீரின் ஓட்டம் தடுக்கப்பட்டு கண்மாயின் பெரும் பகுதி ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி விவசாயிகளுக்கும் மீன்வளத்துக்கும் சிக்கல் ஏற்படுகின்றன.
எனவே விவசாயிகள் வேதனையின் உள்ளனர். ஒவ்வொரு முறையும் பல லட்சம் செலவழித்து இவற்றை அகற்றும் பணியை மேற்கொள்வதை தவிர்த்து மற்ற மாநிலங்களில் நிரந்தர தீர்வு காணும் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

