ADDED : டிச 16, 2024 05:38 AM

சிவகாசி : சிவகாசியில் 2வது கரிசல் இலக்கிய திருவிழாவின் நிறைவு விழா, பரிசளிப்பு விழா நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சிவகாசி மேயர் சங்கீதா முன்னிலை வகித்தார். முதல் அமர்வில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தலைமையில் கரிசல் இலக்கிய நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், ரவீந்திரன், விஜிலா தேரிராஜன், தமிழ் குமரன், அன்னக்கொடி பேசினர். கரிசல் சிறுகதை, கரிசல் கவிதை, கரிசல் நாடகம், கரிசல் நாவல், நாட்டுப்புறக் கலைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடந்த கருத்தரங்குகளில் எழுத்தாளர்கள் தேவதாஸ், ஆனந்தகுமார், லட்சுமண பெருமாள், நந்தன் கனகராஜ், பத்மநாபன், கிளிராஜ், ராமச்சந்திரன், உதயசங்கர் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்கள் பேசினர். பல்வேறு கல்லுாரி மாணவர்களின் இலக்கிய நாடகம் நடந்தது.
திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் கரிசல் வாழ்வியல் என்ற தலைப்பில் பேசினார். இலக்கிய உரைகள் ஆற்றிய எழுத்தாளர்களுக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கரிசல் இலக்கியம் கழக செயலாளர் அறம், அரசு அலுவலர்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

