/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி - மதுரை இரவு பஸ் வசதி இல்லை மக்கள் திண்டாட்டம்
/
காரியாபட்டி - மதுரை இரவு பஸ் வசதி இல்லை மக்கள் திண்டாட்டம்
காரியாபட்டி - மதுரை இரவு பஸ் வசதி இல்லை மக்கள் திண்டாட்டம்
காரியாபட்டி - மதுரை இரவு பஸ் வசதி இல்லை மக்கள் திண்டாட்டம்
ADDED : அக் 23, 2025 03:42 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் இரவு 11:00 மணிக்கு மேல் மதுரைக்கு பஸ் வசதி இல்லை. பயணிகள் சிரமப்படுவதால் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி, மதுரை --- துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது. நான்கு வழிச் சாலை ஏற்படுத்துவதற்கு முன் 24 மணி நேரமும் பஸ் வசதி இருந்தது. ஊருக்குள் பயணிகள் ஏறி, இறங்க வசதியாக இருந்தது. அது ஏற்படுத்திய பின் பஸ்கள் நிறுத்தாமல் சென்று வருகின்றனர். காரியாபட்டியில் 10:00 மணி வரை டவுன் பஸ்கள் இயங்குகிறது.
மதுரைக்கு செல்ல இரவு 11:00 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லை.
ஆத்திர அவசரத்திற்கு மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இரவு நேரத்தில் நான்கு வழிச்சாலையில் செல்லும் பஸ்கள், காரியாபட்டி பயணிகளை ஏற்றுவது கிடையாது. மக்கள் நடமாட்டம் இருக்காது. அச்சத்துடன் நிற்க வேண்டி உள்ளது.
இரவு நேரங்களில் ஊருக்குள் பஸ் சென்று வர அதிகாரிகளுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் காரியாபட்டி ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.