ADDED : அக் 23, 2025 03:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் சிறு பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தெருவிற்குள் நுழைய முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 35வது வார்டு ராமசாமிபுரம் மெயின் ரோட்டில் இருந்து இங்குள்ள காலனி தெருவிற்கு செல்ல சிறு பாலம் 25 நாட்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தப் பகுதிக்கு செல்ல ஒரே பாதையாக இருப்பதால் மக்களின் வசதிக்காக மண்ணை கொட்டி மாற்று பாதை அமைக்கப்பட்டது.
3 நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையில் மண்ணாலான மாற்று பாதை கரைந்து சேறும் சகதியுமானது. பாதை இன்றி வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். பணியையும் கிடப்பில் போட்டதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.