/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி - அருப்புக்கோட்டை மாலை நேர பஸ் மீண்டும் இயக்கம்
/
காரியாபட்டி - அருப்புக்கோட்டை மாலை நேர பஸ் மீண்டும் இயக்கம்
காரியாபட்டி - அருப்புக்கோட்டை மாலை நேர பஸ் மீண்டும் இயக்கம்
காரியாபட்டி - அருப்புக்கோட்டை மாலை நேர பஸ் மீண்டும் இயக்கம்
ADDED : அக் 27, 2024 03:42 AM
காரியாபட்டி : காரியாபட்டியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு இயக்கப்பட்ட மாலை நேர டவுன் பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவித்து வருவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியால் மீண்டும் பஸ் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காரியாபட்டியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு இயக்கப்பட்டு வந்த மாலை நேர பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. அருப்புக்கோட்டைக்கு ஏராளமான மொபசல் பஸ்கள் இருந்தாலும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்துவர். கே கரிசல்குளம், வக்கணாங்குண்டு, கரியனேந்தல், தோணுகால், சமத்துவபுரம், ராமானுஜபுரம், கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் டவுன் பஸ்சை நம்பி பயணிக்கின்றனர். அதிலும் இலவச பஸ் என்பதால் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில் மாலை 6:35க்கு இயக்கப்பட்ட பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் தவிப்புக்கு உள்ளாகினர். மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இரவு 9:35க்கு கடைசி பஸ் இயக்கப்பட்டதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக மாலை நேர பஸ் மீண்டும் இயக்கப்பட்டது. பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.