/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவியிடம் 26 சவரன் மோசடி கர்நாடக வாலிபருக்கு 'காப்பு'
/
மாணவியிடம் 26 சவரன் மோசடி கர்நாடக வாலிபருக்கு 'காப்பு'
மாணவியிடம் 26 சவரன் மோசடி கர்நாடக வாலிபருக்கு 'காப்பு'
மாணவியிடம் 26 சவரன் மோசடி கர்நாடக வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஆக 06, 2025 10:57 PM

ராஜபாளையம்:திருமணம் செய்வதாக ஆசை காட்டி மாணவியிடம், 26 சவரனை ஏமாற்றிய கர்நாடக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. சிவகாசி தனியார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவரது மகன் லிவின், 25, என்பவருடன், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் வாயிலாக பழக்கமாகி பல மாதங்களாக தொடர்பு நீடித்துள்ளது.
திருமணம் செய்து கர்நாடக மாநிலத்தில் வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறியதால், மாணவி தன்னிடம் இருந்த 26 சவரன் தங்க சங்கிலியை கொடுத்தார். ஆனால் சொன்னபடி அந்த கர்நாடகா இளைஞர் செய்யவில்லை. வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் மாணவி புகார் அளித்தார்.
கர்நாடகா சென்ற போலீசார் லிவினை கைது செய்து, 21 சவரன் நகைகளை மீட்டனர். 5 சவரன் அடமானத்தில் இருப்பதாக கூறினார். அவரை ராஜபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.