/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீரால் சிறுநீரக பாதிப்பு; : தடுப்பு சுவர் போல் வாறுகால்
/
குடிநீரால் சிறுநீரக பாதிப்பு; : தடுப்பு சுவர் போல் வாறுகால்
குடிநீரால் சிறுநீரக பாதிப்பு; : தடுப்பு சுவர் போல் வாறுகால்
குடிநீரால் சிறுநீரக பாதிப்பு; : தடுப்பு சுவர் போல் வாறுகால்
ADDED : நவ 03, 2024 04:50 AM
காரியாபட்டி: சுண்ணாம்பு சத்து நிறைந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருவதால் உப்பு சத்து ஏற்பட்டு சிறுநீரக பாதிப்பால் பலர் சிகிச்சை பெற்று வருவது, பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வாறுகால் வீட்டின் வாசல்படி உயரத்தை தாண்டி இருப்பதால் மக்கள் வீடுகளுக்குள் சென்று வர முடியாமல் அவதிப்படுவது, சென்னம்பட்டி வலது புற கால்வாயில் கழிவுநீர் சென்று தேங்கி துர்நாற்றம் வீசுவதால் குடியிருக்க முடியாமல் தவிப்பது உள்ளிட்ட பிரச்னைகளால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமப்படுகின்றனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் உள்ளூரில் ஆள்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் சுண்ணாம்பு சத்து அதிக அளவில் இருப்பதால், சிறுநீரக பாதிப்பு அதிகரித்து பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். சிறுவயதினர் சிலர் இறந்துள்ளனர். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் பேரூராட்சியில் ஒப்படைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், குடிநீர் சப்ளை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னம்பட்டி இடதுபுற கால்வாயில் 11வது வார்டு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வரத்து கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையால் மக்கள் குடியிருக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வாறுகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வீட்டின் வாசல்படி உயரத்தை தாண்டி வாறுகால் சுவர் கட்டப்பட்டதால் மக்கள் ஏறி இறங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.