அரசு பஸ் மோதி பலி
விருதுநகர்: விருதுநகர் அருகே மீசலுார் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாரிச்சாமி 47. இவர் ஆடு வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். மார்ச் 17 காலையில் வியாபாரத்திற்காக பி.குமாரலிங்கபுரத்திற்கு சென்று விட்டு இரவு 8:30 மணிக்கு மீசலுார் விலக்கில் நடந்து சென்று போது விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் அரசு பஸ்சை ஓட்டிவந்த மதுரை கள்ளிக்குடி அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்த டிரைவர் ராஜா மோதியதில் மாரிச்சாமி தலை நசுங்கி சம்பவயிடத்திலேயே பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு திரி பதுக்கியவர் கைது
விருதுநகர்: கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் நாகேந்திரகுமார் 29. இவர் அனுமதி பெறாமல் பட்டாசு தயாரிக்க தேவையான மிஷின் திரியை பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்து ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.
டிரைவர் பலி
விருதுநகர்: கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் 34. இவர் மினி பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். மார்ச் 17 இரவு 12:50 மணிக்கு வேலை முடிந்து கண்டக்டர் முஸ்தபாவுடன் உணவருந்தி விட்டு துாங்கியவர் நெஞ்சுவலியால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
சாத்துார்: கோட்டை பட்டியை சேர்ந்தவர் வீர வினோத், 28. இவர் மனைவி சரண்யா தேவி, 24. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மார்ச் 15ல் கணவரிடம் கோபித்துக் கொண்டு நடுச்சத்திரத்தில் உள்ள தாயார் முத்து கருப்பாயி, 45. வீட்டிற்கு வந்தார். இரவு குழந்தைகளுடன் உறங்கினார். காலையில் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
டிராக்டரில் மோதி டீக்கடைக்காரர் பலி
சிவகாசி: சித்துராஜபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் 54. டீக்கடை நடத்தி வரும் இவர் தனது டூவீலரில் பி. திருவேங்கடபுரத்தில் இருந்து சித்துராஜபுரம் வருவதற்காக சிவனாண்டிபட்டி அருகே வரும்போது அங்குள்ள ஓடு பாலத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் டிரெய்லரில் மோதி இறந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.------

