ADDED : மார் 04, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் நடந்த கிடா முட்டு போட்டியில் கிடாய்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன.
நரிக்குடி வீரசோழனில் 6வது ஆண்டு கிடா முட்டு போட்டி நடந்தது. இஸ்லாமிய ட்ரஸ்ட் போர்டு தலைவர் பஷீர் அகமது துவக்கி வைத்தார். மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 60 கிடாய்கள் வந்தன.
போட்டியில் கிடாய்கள் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டன. அதிக முட்டுக்கள் வாங்கி, அசராமல் நின்ற கிடாய்களுக்கும், உரிமையாளர்களுக்கும் பித்தளை அண்டா, சில்வர் அண்டா, பித்தளை குடம், ரொக்க பணம் பரிசு பொருட்களாக வழங்கப்பட்டன.
உள்ளுர், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். திருச்சுழி டி.எஸ்.பி.,ஜெகநாதன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

