தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி: 3 பேர் கைது

கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி: 3 பேர் கைது

கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி: 3 பேர் கைது


ADDED : அக் 22, 2024 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் 33, இவர் திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலைக்கான தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிர்வாக அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.

அக் 19 இரவு அத்திகுளத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்த நிலையில் டீ குடிக்க, நண்பர் அருண்மொழியுடன் டூவீலரில் இரவு 11:45 மணிக்கு திருப்பாற்கடல் சந்திப்பில் வழிமறித்த 4 பேர், கத்தியை காட்டி மிரட்டி பணத்தையும், தங்கச்செயினையும் பறிக்க முயற்சித்தனர்.

போலீசார் விசாரணையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராம்குமார், முகமது ஆசிப்,30, அபுதாகிர் 29, மஸ்தான் 22, ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதில் ராம்குமார் தலை மறைவான நிலையில் மற்ற மூவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ராம்குமார் கொலை வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us