/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொண்டலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
கொண்டலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 11, 2025 04:48 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கொண்ட லம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ராமசாமிபுரம் சந்திப்பு அருகில் புதியதாக கட்டப்பட்டுள்ள, கம்மவார் சேம்புலியார் குலம் கோங்கு நுால் கோத்திரம் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட கொண்டலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முதல் நாள் யாகசாலை பூஜையில் விக்னேஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப ஸ்தாபனம், மகாலட்சுமி, சுதர்சன உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது.
2 ம் கால பூஜையில் வேத பாராயணம், கும்ப ஜபம், பூர்ணா குதி நடந்தது. 3 ம் கால பூஜையில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 4ம் கால பூஜையில் நித்திய ஹோமம், மகா கணபதி பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மேல் கடம் புறப்பாடு, கொண்டலம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள், கன்னிமூல மகா கணபதி, கருப்பசாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிகளுக்கு அலங்காரம், பூஜைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது.
விழாவை ஒட்டி கோதையாண்டாள் பஜனை, கோவில்பட்டி தனலட்சுமி பஜனை, காக்கிவாடன்பட்டி கிருஷ்ணாமிர்த பஜனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் திருப்பணி குழுவினர் செய்தனர்.