sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கே.ஆர்., குழும நிறுவனர் தின விழா

/

கே.ஆர்., குழும நிறுவனர் தின விழா

கே.ஆர்., குழும நிறுவனர் தின விழா

கே.ஆர்., குழும நிறுவனர் தின விழா


ADDED : செப் 19, 2024 04:28 AM

Google News

ADDED : செப் 19, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: கோவில்பட்டி கே.ஆர். குழுமம், கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.ராமசாமியின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு நிறுவனர் தினவிழா சிறப்பாகநடந்தது.

கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கோவில்பட்டி பழைய பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம், ராமசாமி தாஸ் நினைவு பூங்கா மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் சுத்தம் செய்யப்பட்டது. அன்னதானம், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.

சென்னை அட்ராய்ட் சாப்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நேஷனல் பொறியியல் கல்லுாரியின் முன்னாள் மாணவருமான ராஜேந்திரன் செயற்கை நுண்ணறிவு நிகழ்கால, எதிர்காலநிலை என்ற தலைப்பில் பேசினார்.

கே.ஆர்.ராமசாமி நினைவு தகுதி சார் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கே.ஆர்.குழுமம், கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத்தலைவர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், செயலாளர் சி.சங்கர நாராயணன் நிர்வாக குழு உறுப்பினர்கள், குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கே.ராமசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நேஷனல் பொறியியல் கல்லுாரியின் இயக்குனர் சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரன், கே.ஆர். கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் மதிவண்ணன், அனைத்து கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஒருங்கிணைப்பாளர்கள் ராமமூர்த்தி, பிரகாஷ், கருணை ராகவன், ராஜாமணி, சுப்புராயலு, மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us