ADDED : நவ 14, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் ; விருதுநகர் மாவட்ட மிதிவண்டி கழகத்தின் சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி ராஜபாளையத்தில் நடந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் மாணவர்கள் திவ்யகீர்த்தி, அறிவு புகழேந்தி, தீபிகா, ஆக்சில்யா சிஜி, சுஜன், உதய ரூபன், நாக ஜெயந்தி, சக்தி ஷாலினி ஆகியோர் சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்றனர்.
சாதனை மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சுந்தர மகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன், பள்ளி நிர்வாகிகள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பாராட்டினர்.

