ADDED : ஜூன் 25, 2026 10:57 PM

அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் உள்ள வேல்முருகன் காலனி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வேதபாராயணம், கோ பூஜை செய்யப்பட்டது. எந்திர ஸ்தாபன பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், இரண்டாம் யாகசாலை பூஜை, யாத்திரா தானம், கடம் புறப்படுதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. புனிதநீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் நடந்தது.
