/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கனிமங்களை திருடினால் குண்டாஸ் கலெக்டர் எச்சரிக்கை
/
கனிமங்களை திருடினால் குண்டாஸ் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : மே 25, 2025 11:00 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்களை திருடினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என கலெக்டர் எச்சரித்தார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிமவளங்கள் எடுத்தல், கொண்டு செல்தல், சேமித்து வைத்தல் உள்ளிட்டவற்றை தடுத்து கனிம வளத்தை பாதுகாப்பது குறித்த தொடர்புடைய கனிமவளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சில கிரசர்களிலிருந்து வெளிவரும் எம்.சான்ட், பி.சான்ட், ஜல்லி கற்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இசைவாணை, அனுமதிசீட்டு இன்றி ஜி.எஸ்.டி., ரசீது மட்டும் வைத்துக்கொண்டு கனிமங்கள் எடுத்துச்செல்வது தெரியவருகிறது.
பாஸ் இன்றி கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் யாவும் உரிய அனுமதி சீட்டின்றி கனிம கடத்தலில் ஈடுபட்டதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும். கனிம சேமிப்புக் கிடங்கிற்கு பார்ம் 'ஏ'ல் ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் தங்களது கனிம சேமிப்பு கிடங்கானது நிரந்தரமாக மூடப்படும், அனுமதி இல்லாமால் இருப்பு வைக்கப்பட்டுள்ள கனிமங்களானது பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
கனிமங்கள் வெட்டி எடுப்பது, எடுத்துச்செல்வது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர், என்றார்.