/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பை கொட்டுவதால் அழிந்து வரும் குறவன் குளம் கண்மாய்
/
குப்பை கொட்டுவதால் அழிந்து வரும் குறவன் குளம் கண்மாய்
குப்பை கொட்டுவதால் அழிந்து வரும் குறவன் குளம் கண்மாய்
குப்பை கொட்டுவதால் அழிந்து வரும் குறவன் குளம் கண்மாய்
ADDED : ஜூன் 16, 2025 12:08 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே குப்பை கொட்டியும், கழிவுநீர் விடப்பட்டும் அழியும் நிலையில் குறவன் குளம் கண்மாய் உள்ளது.
அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி ஊராட்சி குறவன் குளம் கண்மாயில் 8 ஏக்கர் பரப்பில் உள்ள இந்த கண்மாய் ஒரு காலத்தில் இந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் குளிக்கும் இடமாகவும் பயன்பட்டது. கண்மாயைச் சுற்றி உள்ள நிலங்கள் பாசன வசதி பெற்றது. நாளடைவில் கண்மாய் பராமரிப்பு இன்றி போனதால், ஊரின் ஒட்டுமொத்த கழிவும் இங்கு விடப்படுகிறது.
கட்டட கழிவுகள், குப்பை, விவசாய கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கண்மாயில் கொட்டப்படுகின்றன. கண்மாயின் மற்றொரு பகுதி சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. கண்மாயின் நீர்வரத்து ஓடைகளில் குப்பைகளை கொட்டி அடைத்து விட்டதால் கண்மாய்க்கு தண்ணீர் வருவது இல்லை. கண்மாயில் கால் வைத்த உடன் சிறிது நேரத்தில் அரிப்பு ஏற்படுகிறது.
கண்மாயை தூர்வார கோரி பலமுறை ஊராட்சியில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. குப்பைகளால் கண்மாய் சிறிது சிறிதாக மேவப்பட்டு, இன்னும் சில காலத்தில் கண்மாய் காணாமல் போய்விடும். எனவே துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.