/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
l பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் தாமதம்; lவெளியூர் ஆர்டர் இல்லாததால் வியாபாரிகள் கவலை
/
l பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் தாமதம்; lவெளியூர் ஆர்டர் இல்லாததால் வியாபாரிகள் கவலை
l பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் தாமதம்; lவெளியூர் ஆர்டர் இல்லாததால் வியாபாரிகள் கவலை
l பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் தாமதம்; lவெளியூர் ஆர்டர் இல்லாததால் வியாபாரிகள் கவலை
ADDED : செப் 22, 2024 05:25 AM
விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி சாத்துார், வெம்பக்கோட்டை பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. 2500க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளிக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
தமிழக மாவட்டங்களிலும் உள்ள சிறு, பெரிய பட்டாசு வியாபாரிகள் விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து பட்டாசுமொத்த விற்பனை கடைகள், பட்டாசு ஏஜன்ட்களிடம் தீபாவளிக்கு இரு மாதங்களுக்கு முன்பே ஆர்டர் கொடுப்பர். ஆனால் இதுவரையிலும் வெளி மாவட்டங்களில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்காததால் வியாபாரிகள் பட்டாசு வாங்க ஆர்டர்கள் கொடுக்கவில்லை. சென்ற ஆண்டு தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இந்த தீபாவளிக்காவது குறைந்தது 15 நாட்களுக்கு முன்பு உரிமம் வழங்கினால் வியாபாரிகள் பட்டாசு வாங்க வருவர்.
சென்ற தீபாவளிக்கு இரு மாதங்களுக்கு முன்பே விருதுநகர் மாவட்டத்தில் 50 சதவீத பட்டாசுகள் விற்பனையானது. ஆனால் தற்போது 10 சதவீத பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு சில வியாபாரிகள் மட்டுமே பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளுக்கு இரு ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு உரிமம் புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்த பெரும்பான்மையான கடைகளுக்கு இதுவரையில் உரிமம் வழங்கவில்லை.
இதனால் இங்குள்ள வியாபாரிகளும் பட்டாசு முடக்கத்தால் கவலையில் உள்ளனர். எனவே அரசு குறைந்தபட்சம் தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
கணேசன், பட்டாசு மொத்த விற்பனையாளர், சிவகாசி, எப்பொழுதுமே தீபாவளிக்கு இரு மாதங்களுக்கு முன்பாகவே வெளி மாவட்ட வியாபாரிகள் ஆர்டர் கொடுப்பதால் 50 சதவீத பட்டாசுகள் விற்பனையாகிவிடும்.
ஆனால் இந்த முறை இதுவரையிலும் ஆர்டர் கொடுக்கவில்லை. இதனால் பணமும் முடங்கியதோடு, பட்டாசுகளும் தேக்கமடைந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக பட்டாசு கடைகளுக்கு உரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.