/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கார்பன் சமநிலைக்கு அடர்வனங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பு; விவசாயிகள், தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கவும்
/
கார்பன் சமநிலைக்கு அடர்வனங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பு; விவசாயிகள், தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கவும்
கார்பன் சமநிலைக்கு அடர்வனங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பு; விவசாயிகள், தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கவும்
கார்பன் சமநிலைக்கு அடர்வனங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பு; விவசாயிகள், தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கவும்
UPDATED : ஆக 25, 2025 06:38 AM
ADDED : ஆக 25, 2025 02:35 AM

அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறையானது முன்னோடி மாவட்டங்களான கோவை, நீலகிரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை தேர்ந்தெடுத்து செயல்திட்டங்களை உருவாக்கி வருகிறது. காலநிலை மாற்றத்தால் பருவங்கள் மாறி வருகின்றன. சரியான நேரத்தில் மழை பொழிவு இல்லாமலும், பருவநிலை இல்லாத நேரத்தில் மழை பெய்வதுமாக இருக்கிறது. இந்த காலநிலை மாற்றத்திற்கு காரணம் நாம் தான்.
2030க்குள் 43 சதவீதம் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் இல்லையென்றால் உலக வெப்பமயமாதலில் இருந்து தப்பிக்க முடியாது என ஐ.நா., சபையின் காலநிலை மாற்றங்களுக்கான குழு அறிவுறுத்தி உள்ளது.
வனத்துறை மூலம் பசுமை தமிழகம் திட்டம், மாவட்டத்தின் முந்தைய கலெக்டர்கள் மேகநாதரெட்டி, ஜெயசீலன்செய்த பசுமை விடியல், மியாவாக்கிதிட்டங்களில் நிறைய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டிருந்தாலும் அவை போதாத சூழல் தான் உள்ளது. நகர்ப்பகுதிகளில், ரோட்டோரங்களில் பல தன்னார்வ அமைப்புகள் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
இதையும் தாண்டி இன்னும் மாவட்டத்தில் காலிநிலங்களான வருவாய், கண்மாய் புறம் போக்கு நிலங்களில் அதிகப்படியான குறுங்காடுகளை செயல்படுத்த வேண்டி உள்ளது. தற்போது கருவேல மரங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் வேம்பு, புங்கன், அரச மரங்கள் இருந்தால் தான் காற்றில் கார்பன் அளவு குறையும்.
2021 கணக்கின் படி ராஜபாளையத்தில் 7 லட்சம் டன் அளவிலான கார்பன் வெளிபாடு உள்ளது தெரிய வந்துள்ளது. இங்கு 2040ம் ஆண்டிற்குள் கார்பன் சமநிலை இலக்கை அடைய முடியும் என கூடுதல் அரசு தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்தார்.
இதற்கு பதிவு செய்த விவசாய சங்கங்கள், அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் புறம்போக்கு நிலங்களில் அரசின் விதிகளுக்கு உட்பட்டு குறுங்காடுகளை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொழிற்சாலைகளுக்கு உரிமம் புதுப்பிக்கும் போது ஆலைகளில் உள்ள காலநிலங்கள் அல்லது அந்த ஆலை ஏதாவது ஒரு பகுதி காலி புறம் போக்கு நிலத்தில் குறுங்காடுகள் வளர்த்தால் தான் கிடைக்கும் என நெறிமுறைப்படுத்தலாம்.
இதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைக்க வேண்டும்.அடர்த்தியாக வைப்பதன் மூலம் மரங்கள் வேகமாக வளரும். இதன் மூலம் வேகமான கார்பன் சமநிலை இலக்கை எளிதில் அடைய முடியும்.