/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
l பள்ளி வளாக பள்ளங்கள் சரி செய்யப்படுமா ஏக்கம்; l மழை வந்தால் வெளியேற முடியாது அவதி
/
l பள்ளி வளாக பள்ளங்கள் சரி செய்யப்படுமா ஏக்கம்; l மழை வந்தால் வெளியேற முடியாது அவதி
l பள்ளி வளாக பள்ளங்கள் சரி செய்யப்படுமா ஏக்கம்; l மழை வந்தால் வெளியேற முடியாது அவதி
l பள்ளி வளாக பள்ளங்கள் சரி செய்யப்படுமா ஏக்கம்; l மழை வந்தால் வெளியேற முடியாது அவதி
ADDED : ஆக 27, 2024 05:55 AM
மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை, கட்டட சேதம் போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில் மற்றொரு பிரச்னையாக உள்ளவை தான் தாழ்வான பள்ளங்கள்.
பள்ளி வளாகங்களுக்கு உள்ளே நில அமைப்புக்கு ஏற்றவாறு அமைந்துள்ள இந்த பள்ளங்களில் பருவ மழை காலங்களில் பெய்யும் மழைநீரானது தேங்கி வடியாமல் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் காலை நேரங்களிலும் தாண்டி, சிரமப்பட்டு தான் வகுப்பறைகளுக்கு செல்கின்றனர். அதே போல் வீடு திரும்பும் போதும் அவதிப்படுகின்றனர்.
மாணவர்களின் சிறப்பு பயிற்சி வகுப்புகள் இது போன்ற வளாகத்தில் தான் நடப்பதால் அங்கு மழை பெய்து நீர் தேங்கி விட்டால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் படிக்கும் சூழல் உள்ளது. வகுப்பறைகளில் வெளிச்சம் இல்லாத காரணங்களால் வீட்டுக்கு அனுப்பப்படும் சூழலும் உள்ளது. இந்த பாதிப்பை சந்திக்கும் பல்வேறு பள்ளிகள் வளாக பள்ளங்கள் தொடர்பாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் தற்போது வரை அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. தற்போது வண்டல் மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மண் குவியலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களே வாங்கி பாதிக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள பள்ளங்களை சமன்படுத்தலாம்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது விரைவில் பருவமழை பெய்ய உள்ள சூழலில் பலருக்கு தலைமையாசிரியர்கள் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மாணவர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் சிறப்பு கவனம் எடுத்து வளாக பள்ளங்களை சமன்படுத்தி மழைநீர் தேங்காது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

