/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
l பயன்படாத குளியல் தொட்டிகளை பராமரிப்பது அவசியம்; l நிதி வீணாவதுடன் மக்கள், கால்நடைகள் பாதிப்பு
/
l பயன்படாத குளியல் தொட்டிகளை பராமரிப்பது அவசியம்; l நிதி வீணாவதுடன் மக்கள், கால்நடைகள் பாதிப்பு
l பயன்படாத குளியல் தொட்டிகளை பராமரிப்பது அவசியம்; l நிதி வீணாவதுடன் மக்கள், கால்நடைகள் பாதிப்பு
l பயன்படாத குளியல் தொட்டிகளை பராமரிப்பது அவசியம்; l நிதி வீணாவதுடன் மக்கள், கால்நடைகள் பாதிப்பு
ADDED : ஜூலை 01, 2024 05:33 AM
மாவட்டத்தில் முன்பு மும்மாரி மழை பெய்து, அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி, மக்கள், கால்நடைகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் மழை அளவு குறைந்து ஆறு, கண்மாய், குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வரத்து ஓடைகள் காணாமல் போனதையடுத்து நீர் நிலைகள் வறண்டு போயின. பெரும்பாலான நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்கின்றன.
நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாததால் கால்நடைகள் வளர்ப்பு குறைந்தன. தற்போதுள்ள தலைமுறையினர் நீச்சல் கற்றுக் கொள்வது இயலாத காரியமாகி போனது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் ஆழ்துளை கிணறு அமைத்தும் பயனில்லாத சூழல் உள்ளது. இதனால் ஊருக்கு பொதுவான இடத்தில் நிலத்தடி நீர் உள்ள பகுதியில் குளியல் தொட்டி கட்ட அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆண்கள், பெண்கள் என தனி குளியல் தொட்டி கட்ட ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3.50 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. குளிக்க, துணி துவைக்க கால்நடைகளை பராமரிக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் மின் மோட்டார் திருட்டு, கூடுதல் மின் கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையில் குளியல் தொட்டியை பராமரிக்காமல் கிடப்பில் போட்டனர். கால்நடைகள், மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குளியல் தொட்டிகளில் சமூக விரோதிகள் மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மது போதையில் பாட்டில்களை உடைத்து, தொட்டிகளை சேதப்படுத்தி விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் கழிவுநீர் செல்ல வழியின்றி தொட்டிகளை சுற்றி தேங்கி சேரும் சகதியுமாக கொசு உற்பத்திக்கு வழி வகுக்கிறது.
பயன்பாட்டில் உள்ள ஒரு சில தொட்டிகளையும் சரிவர சுத்தம் செய்யாமல் அழுக்கு படிந்து குளித்தால் உடலில் அரிப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் அரசு நிதி ரூ.பல லட்சம் வீணடிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள் பராமரிப்பு பணிகளை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.