/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் வார்டுகளில் அலட்சியம்: நோயாளிகள் பயோ மெடிக்கல் பிரித்து போடுவதில்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் வார்டுகளில் அலட்சியம்: நோயாளிகள் பயோ மெடிக்கல் பிரித்து போடுவதில்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் வார்டுகளில் அலட்சியம்: நோயாளிகள் பயோ மெடிக்கல் பிரித்து போடுவதில்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் வார்டுகளில் அலட்சியம்: நோயாளிகள் பயோ மெடிக்கல் பிரித்து போடுவதில்
UPDATED : நவ 04, 2025 05:10 AM
ADDED : நவ 04, 2025 03:45 AM

விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் தற்போது 1276 படுக்கைகளாக உயர்த்தப்பட்டு செயல்படுகிறது. இங்குள்ள வார்டுகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஊசியின் மூடி, குளுகோஸ் பாட்டில், சிரிஞ்ச், கையுறையை பிரித்து போடுவதற்காக சிவப்பு நிற டப்பாவும், ஊசியை மட்டும் போடுவதற்கு வெள்ளை நிற டப்பாவும் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல மருந்து கட்டும் காட்டன் துணி, பஞ்சு, மாஸ்க், அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படும் தலையுறை ஆகியவற்றை போடுவதற்கு மஞ்சள் நிற டப்பாவும், மருந்து பாட்டில்களை போடுவதற்கு நீல டப்பாவும் மருத்துவமனை நிர்வாகத்தால் அந்தந்த வார்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் வார்டுகளில் நோயாளிகளுக்கு சிரிஞ்ச் மூலமாக மூடியை அகற்றி ஊசியில் மருந்து ஏற்றிய பின் அவற்றை தனித்தனியாக அதற்குரிய டப்பாக்களில் போடாமல் ஊசியை மூடியுடன், சிரஞ்ச் என மொத்தமாக ஒரே டப்பாவில் சில செவிலியர்கள் அப்படியே போட்டு விடுகின்றனர்.
இந்த பயோ மெடிக்கல் கழிவுகளை கையுறை போட்டுக்கொண்டு பிரிக்கும் பணியில் ஈடுபடும் துாய்மை பணியாளர்களின் கையை மூடி பிரிக்காமல் போடும் ஊசிகள் குத்தி பதம் பார்க்கின்றன. நோயாளிகளுக்கு பயன்படுத்திய ஊசி என்பதால் பிரிக்கும் பணியின் போது துாய்மை பணியாளர்களுக்கு நேரடியான நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும் நோயாளிகளுக்கு மருந்து கட்டும் பணியாளர்கள் சிலர் பயன்படுத்தப்பட்ட காட்டன் துணி, பஞ்சு ஆகியவற்றை பணிகளை முடித்ததும் பொருட்களுடன், தங்களின் கைகளை கழுவி மஞ்சள் நிற டப்பாவில் விடுகின்றனர்.
இது போன்ற அலட்சியமாக செயல்படும் சில செவிலியர்கள், மருந்து கட்டும் பணியாளர்களால் துாய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து துாய்மை பணியாளர்கள் பல முறை தெரிவித்தும் சில செவிலியர்கள், மருந்து கட்டும் ஊழியர்கள் தொடர்ந்து அலட்சியாக செயல்படுவதால் பணியாளர்கள் நோயாளிகளாக மாறும் நிலை நீடிக்கிறது.
எனவே அரசு மருத்துவமனை வார்டுகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஊசி, மூடி, சிரஞ்ச், மருந்து கட்டும் காட்டன் துணி, பஞ்சு, மாஸ்க் ஆகியவற்றை வார்டு செவிலியர்கள், மருந்து கட்டும் பணியாளர்கள் முறையாக தனித்தனியாக பிரித்து அதற்கான டப்பாக்களில் போடுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

