/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
l குவாரிகளில் அனுமதியின்றி தொடருது கனிமவளம் சுருட்டல்
/
l குவாரிகளில் அனுமதியின்றி தொடருது கனிமவளம் சுருட்டல்
l குவாரிகளில் அனுமதியின்றி தொடருது கனிமவளம் சுருட்டல்
l குவாரிகளில் அனுமதியின்றி தொடருது கனிமவளம் சுருட்டல்
ADDED : மே 28, 2024 05:43 AM
தற்போது மதுரை மாவட்டம் பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குவாரியில் தோண்டுவதற்கான அனுமதி காலம் முடிந்துள்ளது. இதனால் மதுரையில் பல பகுதிகளில் கனிமம் அள்ளுவதில்லை. இந்நிலையில் இதை பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு அதிகப்படியான கனிமங்கள் எடுத்து செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக விருதுநகர் சீனியாபுரம், செங்குன்றாபுரம் பகுதிகளில் அதிகளவில் கனிமங்களை சுருட்டுகின்றனர். கனிமவளத்துறை அனுமதித்த திட்டத்தை மீறி ஆழமாகவும், பக்கத்து நிலங்களை விலைக்கு வாங்கியும் கனிமங்களை கொள்ளையடிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலும் பல குவாரிகளில் அனுமதி காலம் முடிந்து விட்டது. இருப்பினும் குறிப்பிட்ட இப்பகுதிகளில் இருந்து தினசரி 100 முதல் 150 லோடு வரை தினசரி வெளிமாவட்டங்களுக்கு செல்கிறது. இந்த சட்ட விரோத கனிமவள சுருட்டலை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஒரு குவாரிக்கு நாள் ஒன்றுக்கு 30 சீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், ஒரு சீட்டுக்கு ஒரு லோடு வீதம் நாளொன்றுக்கு 30 லோடு தான் அடிக்க வேண்டும். கனரக வாகனங்களில் டாரஸ் லாரி என்றால்17 கன மீட்டரில் லோடு இருக்க வேண்டும். டிப்பர் லாரி என்றால் எட்டரை கன மீட்டர் தான் லோடு இருக்க வேண்டும்.
ஆனால் இப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவும், அதிக எண்ணிக்கையிலும் லோடு அடிக்கப்படுகிறது. கனிமவளங்களை அதிகமாக சுருட்டுகின்றனர். இன்னும் சிலர் அனுமதி காலம் முடிந்த பின்னும் அதிகாரத்தை பயன்படுத்திசுருட்டி வருகின்றனர்.
இப்பகுதிகளில் குவாரி வைத்திருப்பவர்கள் அரசியல் பின்புலம் இருப்பதால் கனிமவள கொள்ளை தாராளமாக நடக்கிறது. நேற்று முதல் குவாரி சங்கத்தினர் ஸ்டிரைக் என்பதால் நேற்று மட்டும் குறைவாக அள்ளி உள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே அதிகளவில் கனிமவளக் கொள்ளை நடந்துள்ளது.
இது குறித்து நேற்று புகார் சென்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் இப்பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதே நேரம் ஒரு குவாரிக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இருப்பினும் இதுவரை நடந்த கனிமவள சுருட்டலுக்கு நடவடிக்கை அவசியமாகிறது.
இது போன்று அனுமதியின்றி வெளிமாவட்டங்களுக்கு கனிமவளங்களை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வரும் நாட்களில் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.