தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 900 லேப் டெக்னீசியன் பணியிடங்கள் காலி

 900 லேப் டெக்னீசியன் பணியிடங்கள் காலி

 900 லேப் டெக்னீசியன் பணியிடங்கள் காலி


ADDED : ஜூலை 04, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூரில் 2022 ஜன.12ல் அரசு மருத்துவக்கல்லுாரிகள் திறக்கப்பட்டது. இவற்றில் 650 லேப் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

தி.மு.க., ஆட்சியில் இப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் தேசிய சுகாதார இயக்கத்தால் (என்.எச்.எம்.,) தொகுப்பூதியத்தில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கு முன்பு திறக்கப்பட்ட தேனி, கரூர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரிகளிலும் லேப் டெக்னீசியன்கள் நிரப்பப்படவில்லை.

இந்த மருத்துவக்கல்லுாரிகளில் 900 லேப் டெக்னீசியன் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படாமல் தொகுப்பூதியத்திலே நிரப்பப்பட்டு வருகிறது. நிரந்தர பணிக்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் (எம்.ஆர்.பி.,) நிரந்தரமாக நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பணியிடங்களை நிரப்ப த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us