தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வேகமாக குறையும் நிலத்தடி நீர்மட்டம்: சணப்பை பயிருக்கும் தண்ணீர் இன்றி தவிப்பு

வேகமாக குறையும் நிலத்தடி நீர்மட்டம்: சணப்பை பயிருக்கும் தண்ணீர் இன்றி தவிப்பு

வேகமாக குறையும் நிலத்தடி நீர்மட்டம்: சணப்பை பயிருக்கும் தண்ணீர் இன்றி தவிப்பு


UPDATED : ஜூலை 04, 2026 11:20 PM

ADDED : ஜூலை 04, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 11:20 PM ADDED : ஜூலை 04, 2026 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேத்துார்:சேத்துார் தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் பருவ மழை மாறுபாடு காரணமாக கிணற்றின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து சணப்பை , தக்கை பூண்டு வளர்க்கவும் தண்ணீர் பாய்ச்ச வழியின்றி விவசாயிகள் தவிக்கின்றனர்.

ராஜபாளையம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய சேத்துார், தேவதானம், கோவிலாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

மலைப்பகுதியில் கிடைக்கும் நீர் வளத்தை வைத்து ஆண்டுக்கு இரண்டு போகம் நெற்பயிர் விளைவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு சுற்று வட்டார விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. இதனால் மண்ணின் வளத்தை இயற்கை முறையில் அதிகரிக்க உதவும் சணப்பை, தக்கை பூண்டு விதைகளை விதைத்து வளர்க்கவும் வழியில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயி தினேஷ் சங்கர்: 4 வருடமாக பருவ மழை பற்றாக்குறை இன்றி பெய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் போதிய மழையால் கண்மாய்களில் நீர் நிறைந்திருந்தும் சுற்றுப்பகுதி விவசாய கிணறுகளில் தண்ணீர் மற்றும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் தற்போது நெற்பயிர் அறுவடை முடிந்து சணப்பை, தக்கை பூண்டு

வளர்க்கவும் போதிய தண்ணீர் இருப்பு இன்றி விவசாயிகள் மழையை எதிர்பார்த்து உள்ளோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us