ADDED : மார் 01, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி- திருச்சுழி அருகே பரளச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்,72, இவருடைய மனைவி தனபாக்கியம். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். மகன் பிரின்ஸ்குமார், 34, கூலி தொழிலாளி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு வீட்டு மாடியில் பால்ராஜ் பார்த்தபோது பிரின்ஸ்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரளச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

