ADDED : செப் 17, 2026 11:30 PM

அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை-: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி சவுந்தரபாண்டியன் 23, மின்னல் தாக்கியதில் பலியானார்.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி மேலத் தெருவை சேர்ந்த சந்திவீரன் மகன் சவுந்தர பாண்டியன். திருமண மாகாதவர். கட்டட தொழிலாளியான இவர் நேற்று அருப்புக்கோட்டை - திருச்சுழி ரோட்டில் உள்ள அலைபேசி ஷோரூம் மாடியில் பணி செய்து கொண் டிருந்தார்.
மாலை 4:30 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி சவுந்தரபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
