ADDED : செப் 17, 2026 11:29 PM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அச்சகத்தில் பணியின்போது இயந்திரத்தில் சேலை சிக்கியதில் காயமடைந்த பெண் தொழிலாளி பாண்டியம்மாள் 47, உயிரிழந்தார்.
சிவகாசி முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. பாண்டியம்மாள் சிவகாசி சாமிபுரம் காலனியில் உள்ள கிருஷ்ணா ஸ்கோரிங் அச்சக நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல பணியில் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக கட்டிங் மிஷினில் சேலை சிக்கி உள்ளே இழுத்தது. அவரை வெளியே இழுக்க முயன்ற போது, இடது கை இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி சிதைந்தது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
அச்சக உரிமையாளர் அருள்செல்வம் 45, மிஷின் ஆப்பரேட்டர் சுரேஷ்குமார் 41, ஆகியோர் மீது கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
