/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரக்குறைவு
/
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரக்குறைவு
ADDED : அக் 05, 2024 03:47 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதார குறைபாடாக இருந்ததற்காக மருத்துவ அலுவலர், செவிலியர் கண்காணிப்பாளர் உட்பட 5 பேருக்கு மருத்துவத்துறை இணை இயக்குனர் மெமோ வழங்கினார்.
அருப்புக்கோட்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். அங்குள்ள பிரசவ வார்டில் படுக்கைகளில் கரைகளும் முழுமையாக சுத்தம் செய்யாமலும் படுக்கை விரிப்பு துணிகள் மாற்றப்படாமல் இருந்துள்ளது.
இது குறித்து அங்குள்ள பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்களை எச்சரித்தார்.
கலெக்டர் உத்தரவு படி, விருதுநகர் மருத்துவ துறை இணை இயக்குநர் பாபுஜி நேரில் ஆய்வு செய்த போது, அறுவை சிகிச்சை பின் கவனிப்பு வார்டிலும் சுகாதார குறைவு இருந்துள்ளது.
இதையடுத்து மருத்துவ அலுவலர், செவிலியர் கண்காணிப்பாளர், வார்டு செவிலியர்கள் 2 உட்பட 5 பேர்களுக்கு மெமோ வழங்கினார்.
துணிகள் சுத்தம் செய்யும் பிரிவிற்கு உள்ள செவிலியர் திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஒப்பந்த பணியில் துணிகள் துவைக்கும் பணியில் உள்ள இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.