/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி அவதி
/
சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி அவதி
ADDED : பிப் 04, 2025 04:53 AM

சாத்துார்: சாத்துார் பஸ் ஸ்டாண்டில் போதுமான இருக்கை வசதியின்றி பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த பக்தர்கள் சாத்துார் வந்து இருக்கன்குடி செல்கின்றனர்.
வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் பயணிகள் சாத்துார் பஸ் ஸ்டாண்டில் உட்காருவதற்கு போதுமான இருக்கை வசதி இன்றி அவதிப்படும் நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்ட் பிளாட்பார துாண்களில் உட்கார்ந்து காத்திருக்கும் நிலை உள்ளது. இவ்வாறு காத்திருக்கும் போது பஸ் ஸ்டாண்டுக்குள் பிளாட்பாரத்தில் நிறுத்த பின்னால் வரும் பஸ்கள் பிளாட்பார துாண்களில் உட்கார்ந்து இருக்கும் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பலர் நுாலிழையில் உயிர் தப்பி உள்ளனர். தற்போது தை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் பஸ் ஸ்டாண்டில் இளைப்பாற வசதியாக கூடுதலான இருக்கைகளை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.