/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகனங்கள் பற்றாக்குறை ஊராட்சிகளில் குவியும் குப்பை
/
வாகனங்கள் பற்றாக்குறை ஊராட்சிகளில் குவியும் குப்பை
வாகனங்கள் பற்றாக்குறை ஊராட்சிகளில் குவியும் குப்பை
வாகனங்கள் பற்றாக்குறை ஊராட்சிகளில் குவியும் குப்பை
ADDED : ஜன 13, 2024 04:50 AM
சிவகாசி, : சிவகாசி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பற்றாக்குறையால் குப்பைகளை அகற்றுவது சிரமம் ஏற்படுகிறது என ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் துணை தலைவர் விவேகன் ராஜ் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்.
சுடர்விழி (அ.தி.மு.க.,): பள்ளபட்டி ஊராட்சி லிங்க புரம் காலனியில் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. கடம்பன்குளம் கண்மாயில் கழிவுநீர் கலக்கிறது.
ஒன்றிய குழு துணை தலைவர்: குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கவிதா (தி.மு.க.,): தேவர் குளம் ஊராட்சியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் உடனடியாக குப்பைகளை அகற்ற முடியவில்லை.
ஜெகத்சிங் பிரபு, (அ.தி.மு.க., ): ஆனையூர் ஊராட்சியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பற்றாக்குறையாக உள்ளது. சிவானந்தா நகர் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.
கலைமணி (தி.மு.க.,): கங்கா குளத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புளுகம்மாள் (அ.ம.மு.க.,) நெடுங்குளம் ஊராட்சி பெரிய குளத்துப்பட்டி ரோடு சேதம் அடைந்துள்ளது.
ஈஞ்சார் அருகேள கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்த ஒருவர் பட்டாசு ஆலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இறந்தார். எனவே ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும்.
அன்பரசு (தி.மு.க.,): அனுப்பங்குளம் கண்மாயில் ஓடை ஆக்கிரமிப்பால் தண்ணீர் வரவில்லை ஓடையை துார்வார வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.