/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெளிவான ஏற்பாடின்றி நிலம் தொடர்பான குறைதீர் கூட்டம்
/
தெளிவான ஏற்பாடின்றி நிலம் தொடர்பான குறைதீர் கூட்டம்
தெளிவான ஏற்பாடின்றி நிலம் தொடர்பான குறைதீர் கூட்டம்
தெளிவான ஏற்பாடின்றி நிலம் தொடர்பான குறைதீர் கூட்டம்
ADDED : நவ 27, 2024 05:14 AM

விருதுநகர்: விருதுநகரில் நிலம் தொடர்பான குறைதீர் கூட்டம் தெளிவான ஏற்பாடின்றி நடந்ததாலும், வருவாய்த்துறை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தாலும், முதல்வர் விழாவில் மனு பெற்றவர்களும் குவிந்ததாலும் கடும் சிரமம் ஏற்பட்டது.
விருதுநகரில் நேற்று நிலம் தொடர்பான குறைதீர் கூட்டம் நடந்தது. வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டம் செய்தனர்.
இதனால் குறைதீர் கூட்டத்தில் வருவாயத்துறையின் தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல பணிநிலைகளில் உள்ளோர் வரவில்லை.
இதனால் குறைதீர் கூட்டம் தெளிவான முன்னேற்பாடின்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக மக்கள் புகார் கூறினர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர்.
வழக்கமாக நிலம் தொடர்பான குறைதீர் கூட்டத்தை போன்று இல்லாமல் இந்த குறைதீர் கூட்டம் நடக்கவில்லை. அதிகாரிகளும்வரவில்லை. ஆனால் மக்கள் அதிகமாக குவிந்து விட்டனர். குறிப்பாக முதல்வர் விழாவில் 40 ஆயிரம் பேருக்கு வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கியதில் சிலருக்கு சரியாக பதிவு செய்யப்படவில்லை என்று கூறி குவிந்த மக்களும் அதிகம் உள்ளனர்.
இது போன்று நேற்றைய நாளில் நடந்த முக்கிய பிரச்னைகளை முன்பே அறிந்து செயல்படாமல் மாவட்ட நிர்வாகம் சொதப்பியதால் மக்கள் திண்டாடினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள், பலர் காலை உணவு கூட உண்ணாமல் வரிசையில் காத்திருந்து, மதியம் வரை சிரமப்பட்டனர்.
மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறையினரின் பணி புறக்கணிப்பு போராட்டம் இருப்பதை முன்பேதெரிந்திருந்து அதற்கேற்ப முடிவு செய்து வேறு நாளில் அறிவித்திருக்கலாம் அல்லது அறிவிக்கப்பட்ட மாதத்தின் கடைசி செவ்வாயில் கட்டாயம் நடத்த வேண்டும் என்றால் பிற தாலுகாக்களில் இருந்து அலுவலர்களை வரவழைத்திருக்கலாம்.
நேற்று மதியம் கடந்தும் மக்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக மதியம் 1:00 மணிக்கு பிறகு மனுக்கள் பெறப்படாது என அலுவலர்கள் கூறியதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து புதிய கலெக்டர் அலுவலகத்தில் இருந்த கலெக்டரை சந்திக்க சென்றனர். இதையடுத்து மனுக்களை அதிகாரிகள் பெற்றனர்.
கொட்டும் மழையிலும் மறியல்
மாலை 6:00 மணி வரை ஆகி, மனுக்கள் பெற்றும் ரசீது தராததால் விரக்தி அடைந்த மக்கள், நான்கு வழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதனம் செய்து நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமாவிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.
மனுக்கள் வாங்கப்பட்ட விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: நிலம் தொடர்பான குறைதீர் கூட்டத்தில் 1847 மனுக்கள் பெறப்பட்டு தொடர்புடைய ஆர்.டி.ஒ.,க்கள், தாசில்தார்கள், தொடர்புடைய துறைகளுக்குபிரித்து அனுப்பப்பட்டு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

