/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் நிலப்பிரச்னை: வி.ஏ.ஓ., கோயில் செயல் அலுவலர் அடிதடி
/
ஸ்ரீவி.,யில் நிலப்பிரச்னை: வி.ஏ.ஓ., கோயில் செயல் அலுவலர் அடிதடி
ஸ்ரீவி.,யில் நிலப்பிரச்னை: வி.ஏ.ஓ., கோயில் செயல் அலுவலர் அடிதடி
ஸ்ரீவி.,யில் நிலப்பிரச்னை: வி.ஏ.ஓ., கோயில் செயல் அலுவலர் அடிதடி
ADDED : மார் 07, 2024 01:59 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டியில் நிலப்பிரச்னை தொடர்பாக வைத்தியநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் ஜவஹருக்கும், வன்னியம்பட்டி வி.ஏ.ஓ., வேல்ராஜூக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக மாறியது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வன்னியம்பட்டி ரயில்வே கேட் அருகில் 70 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து வி.ஏ.ஓ., வேல்ராஜ், மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் நிர்வாகம் இடையே ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு வி.ஏ.ஓ., வேல்ராஜ், இந்த இடம் சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என ஒரு பிளக்ஸ் போர்டு வைத்துள்ளார். இதனை அறிந்த கோயில் செயல் அலுவலர் ஜவஹர் பிரச்னைக்கு உரிய இடத்தில் இருந்த போர்டை எடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு, அடிதடி, மோதல் ஏற்பட்டது. வி.ஏ.ஓ.,வுக்கு மூக்கு, உதட்டில் ரத்தக்காயம் ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

