தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டம் துவக்கம்

நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டம் துவக்கம்

நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டம் துவக்கம்


ADDED : ஜூன் 18, 2025 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2025 04:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தை வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவங்கி வைத்தார்.

விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் நேற்று விருதுநகர் நகராட்சியில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா ட்ரோனை பயன்படுத்தி நில அளவை செய்யும் பணிகளை நில அளவை, நிலவரித்திட்ட இயக்குநர் மதுசூதன்ரெட்டி, கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன் முன்னிலையில், வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

பின் நகர நிலவரித்திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு இணைய வழிப்பட்டாக்களை வழங்கினார். அனைத்து மாவட்டங்களிலும் டி.ஜி.பி.எஸ் என்ற நவீன நில அளவைக் கருவிகளைக் கொண்டு, நில உரிமையாளரின் நிலத்தின் எல்லைகளை அவர்கள் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் காண்பிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களுக்கு உண்டான அளவுகளை அச்ச ரேகை, தீர்க்க ரேகை விபரங்களுடன் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.ஒரு வார காலத்திற்குள் இந்த ட்ரோன் சர்வே முடிந்த பிறகு ஆறு மாதத்திற்குள் அளவு எடுத்து நில உரிமைக்கான சான்றுகள், வரைபடங்களின் தரவுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும், என்றார்.டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், நில அளவை நிலவரி திட்ட கூடுதல் இயக்குனர்கள் கண்ணபிரான், வெங்கடேசன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us