ADDED : ஜூலை 01, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், நிலத் தரகர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில துணைச் செயலாளர் அய்யப்பன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார், ராஜபாளையம் கிளை தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர். இதில் ராஜபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஜூலை 3ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. உறுப்பினர் கென்னடி நன்றி கூறினார்.