/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிற்கால பாண்டியர்கள் கல்வெட்டு கண்டுபிடிப்பு
/
பிற்கால பாண்டியர்கள் கல்வெட்டு கண்டுபிடிப்பு
ADDED : ஜன 01, 2024 05:07 AM

காரியாபட்டி: காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டியில் அய்யனார் கோவில் அருகே நாகரத்தினம் அங்காளம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வரலாற்று துறை மாணவர்கள் தர்மராஜா, கருப்பசாமி தகவல்படி, பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆய்வு செய்ததில், பிற்கால பாண்டியர்களின் கல்வெட்டு இருப்பதை கண்டறிந்தனர்.
அவர்கள் கூறியதாவது: 3 அடி உயரம், 1.5 அடி அகலம், 1.5 அடி தடிமம் கொண்ட, துண்டு கல்வெட்டு. இதன் மேற்பகுதி காணவில்லை. இருக்கக்கூடிய கல்வெட்டில் 17 வரிகள் கொண்ட தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான வரிகள் சிதைந்து காணப்படுகின்றன.
சாத்தப்பன் அழகு செய்த தம்மம் என்றும், வேங்கடனுக்கு சுந்தரபாண்டி பழங்காசு, வெட்டிவரப்பட்ட வார்த்தைகள் மட்டுமே படித்தறிய முடிகிறது. இப்பகுதியில் நிலங்களுக்கு நீர் வரத்தை ஏற்படுத்தி மடையமைத்து கொடுத்திருக்கலாம். 12, 13ம் நூற்றாண்டை குறிக்கிறது.
மற்றொரு பிற்கால கல்வெட்டு காணப்படுகிறது. அதில் 2 புறம் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருபுறம் வடன்காடு மடை என்ற சொல் மட்டும் படித்தறிய முடிகிறது. இதன் மூலம் இப்பகுதியின் வடபுறத்தில் மடை ஒன்று இருந்தது தெளிவாகிறது, என்றனர்.